ஸ்ரீலங்கனை கைவிட்டது TPG

SriLankan

இலங்கையின் ஸ்ரீலங்கன் (SriLankan) விமானசேவை நிறுவனத்தில் முதலிடும் எண்ணத்தை கைவிட்டது அமெரிக்காவின் San Fransiscoவை தளமாக கொண்ட TPG என்ற நிறுவனம்.
.
சுமார் US$ 2 பில்லியன் கடனில் மூழ்கியுள்ள இலங்கை விமான சேவை புதிய முதிலீடு ஒன்றை அவசரமாக தேடியது. TPG என்ற அமைப்பு (equity firm) 49% முதலீடு செய்யும் நோக்கில் இலங்கை விமானசேவையின் கணக்குகளை ஆய்வு செய்திருந்தது. ஆய்வுகளின் பின் இலங்கை விமானசேவையில் முதலீடு செய்வதை தவிர்த்து உள்ளது TPG.
.
2008 ஆம் ஆண்டுவரை இலாபத்தில் இயங்கி இருந்தது இலங்கை விமானசேவை. அப்போது இலங்கை விமானசேவை துபாயின் Emirates விமானசேவையுடன், அதன் சிறு முதலீட்டுடன், இணைந்து செயல்பட்டு இருந்தது. அப்போது இலங்கை விமான சேவையின் CEO ஆக Emirates வழங்கிய ஒருவர் இருந்தார்.
.
ஒருமுறை அப்போதைய ஜனாதிபதி ராஜபக்ஸவின் குடும்பத்தினருக்காக வேறு பயணிகளின் ஆசனங்களை பறிக்க மறுத்த போது ராஜபக்ஸ தனது உறவினர் ஒருவரை (brother-in-law) CEO ஆக நியமித்தார் ஜனாதிபதி.
.
பின்னர் இலங்கை விமானசேவை 8 புதிய Airbus A350-900 வகை விமானங்களை கொள்வனவு செய்ய இணங்கி இருந்தது. அந்த கொள்வனவுகளும் தற்போது இரத்து செய்யப்பட்டு உள்ளது. அதற்கும் US$ 115 மில்லியன் தண்டம் செலுத்தப்படுகிறது.
.

Emirates விமானசேவையுடனும் தற்போது இலங்கை விமானசேவை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளது.
.