ஹமாஸ்: நாடு கிடைத்தால் ஆயுதத்தை கைவிட தயார்

ஹமாஸ்: நாடு கிடைத்தால் ஆயுதத்தை கைவிட தயார்

ஐ.நா. ஏற்றுக்கொண்ட 1967ம் ஆண்டின் எல்லைகளுக்கு ஏற்ப பலஸ்தீன் என்ற தமது நாடு நடைமுறை செய்யப்படல் ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு அரசியல் கட்சியாக மாற தயார் என்று கூறியுள்ளார் ஹமாஸின் அதிகாரி ஒருவர்.

Associated Press (AP) என்ற செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய உரை ஒன்றிலேயே Al-Hayya என்ற ஹமாஸ் அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார். 1967ம் ஆண்டின் எல்லைகளுக்கு அமைய West Bank, காசா உள்ளடங்கிய நாட்டையே Al-Hayya குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. தற்போதும் இதையே பலஸ்தீனர் நிலம் என்கிறது. ஆனால் இந்த நிலம் எங்கும் சட்டவிரோத யூத குடியிருப்புகள் தொடர்கின்றன.

தீர்வு கிடைத்தால் தமது al-Qassam Brigades என்ற ஆயுத பிரிவையே ஹமாஸ் மூடுவதாக கூறியுள்ளது.

இதையே அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் பேச்சளவில் two-state தீர்வு என்கின்றன. ஆனாலும் மேற்கு நாடுகள் தாம் கூறுவதை நடைமுறை செய்ய இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. அதனால் two-state தீர்வு என்பது வெறும் பேசு பொருளாக இருக்க பலஸ்தீனர் நிலம் தினமும் பறிபோகிறது.

பலஸ்தீனரை முற்றாக விரட்ட முனையும் தற்போதைய கடும்போக்கு இஸ்ரேல் அரசு பலஸ்தீனம் என்ற சொல்லுக்கே இடமில்லை என்கிறது.