ஹாங் காங் தொடர் மாடியில் புதன்கிழமை ஏற்பட்ட தீக்கு பலியானோர் தொகை 40 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் தற்போதும் 279 பேரின் இருப்பிடம் அறியப்படவில்லை. தீயால் காயமடைந்தோரில் 45 பேரின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
சில இடங்களில் தீ சுமார் 15 மணித்தியாலங்களாக பரவுகிறது. கடுமையான காற்று வீச்சு தீ பரவலுக்கு காரணமாகி உள்ளது.
இந்த தீ தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் இருவர் கட்டுமான நிறுவனத்தின் director பதவிகளில் உள்ளவர் என்றும் மூன்றாம் நபர் ஒரு consultant என்றும் கூறப்படுகிறது.
கட்டுமான வேலைகளில் பயன்படுத்தப்பட்ட இலகுவில் தீ பற்றக்கூடிய polystyrene பொருட்கள் மூலம் தீ ஆரம்பித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மூங்கில் மூலம் கட்டுமான சாரங்கள் அமைப்பதுவும் ஹாங் காங்கில் தடை செய்யப்பட நடவடிக்கைள் ஏற்கனவே எடுக்கப்பட்டு உள்ளன.
