ஹார்வியின் பின்னர் வருகிறது சூறாவளி ஏர்மா

Irma

அண்மையில் சூறாவளி ஹார்வி (Harvey) அமெரிக்காவின் Huston மாநகர் உட்பட Texas மாநிலத்து கிழக்கு கரையோரத்தை பெரிதும் பாதித்து இருந்தது. அந்த அழிவுகளுக்கு பின்னர் வருகிறது சூறாவளி ஏர்மா (Irma). தற்போது நடுக்கடலில் நகரும் ஏர்மா இன்று திங்கள் கிழமை category 4 ஆக்கவுள்ளது. அது தற்போது சுமார் 210 km/h காற்றை வீசுகிறது.
.
சூறாவளி ஏர்மா அநேகமாக புளோரிடா (Florida) மாநிலத்தையே தாக்கும் என்று கணிப்பிடப்பட்டு உள்ளது. இது புளோரிடா மாநிலத்து தென் முனையில் அல்லது Florida Keyயில் தரை தொடும். பிளோரிடா மாநிலம் இன்று திங்கள் கிழமையே அவசரகால பிரகடனம் செய்துள்ளது. அவ்வாறு செய்வதால் மக்கள் தம்மை நேரகாலத்துக்கு தயார் செய்ய உதவும். பலர் வேறு மாநிலங்களுக்கு தற்காலிகமாக நகரவும் இது உதவும்.
.

சுமார் 20 km/h வேகத்தில் நகரும் ஏர்மா தற்போது Puerto Rico பகுதியில் நிலை கொண்டுள்ளது. சூறாவளி ஏர்மா பெரும்பாலும் category 5 ஆக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளி பிளோரிடாவை அடைய முன் Puerto Rico, Dominican Republic, Haiti, Cuba, Bahamas ஆகிய நாடுகளை அண்மித்து வரும்.
.