​ஆறு பாலஸ்தீன கைதிகள் சுரங்கம் கிண்டி தப்பினர்

​ஆறு பாலஸ்தீன கைதிகள் சுரங்கம் கிண்டி தப்பினர்

இஸ்ரேலில் உள்ள Gilboa என்ற அதிகூடிய பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையில் வைக்கப்பட்டு இருந்த 6 பாலஸ்தீன கைதிகள் நிலத்துக்கு கீழே சுரங்கம் கிண்டி தப்பி உள்ளனர். அவர்களை தேடும் பணியை இஸ்ரேல் தற்போது தீவிரப்படுத்தி உள்ளது.

சிறைச்சாலைக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் பணியாற்றிய தோட்டக்காரர் சிலர் தோட்டங்கள் ஊடாக ஓடுவதை அதிகாரிகளுக்கு அறிவித்த பின்னரே கைதிகள் தப்பியது தெரியவந்துள்ளது.

தப்பியவர்களில் ஒருவர் 46 வயதுடைய Al-Aqsa Martyrs Brigades என்ற ஆயுத குழுவின் முன்னாள் தலைவர் Zakaria Zubeidi. இவர் 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டு இருந்தார். ஏனைய 5 பேரும் Jihad ஆயுத குழுவின் உறுப்பினர். தப்பியவர்கள் 26 முதல் 49 வயதுடையோர்.

தப்பிய கைதிகள் இரகசியமாக தொலைபேசிகளை வைத்திருந்திருக்கலாம் என்றும் தப்பிய இவர்களை எடுத்து செல்ல வெளியில் உதவிகள் வாகனத்துடன் காவல் இருந்திருக்கலாம் என்றும் இஸ்ரேலின் Shin Bet என்ற பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது.

இவர்கள் Jenin என்ற West Bank நகருக்கு அல்லது 14 km தூரத்தில் உள்ள ஜோர்டான் எல்லைக்கு செல்ல முனையலாம் என்று இஸ்ரேல் கருதுகிறது.