​வெனேசுவேலா இராணுவ கவிழ்ப்புக்கு அமெரிக்கா ​முயற்சி?

Venezuela

தென் அமெரிக்காவில் உள்ள வெனேசுவேலா (Venezuela) நாட்டில் இராணுவ சதி மூலம் ஆட்சி கவிழ்ப்பு ஒன்றை செய்ய அமெரிக்காவின் ரம்ப் அரசு பேச்சுவார்த்தைகள் செய்திருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.
.
கடந்த வருடத்தின் இறுதி காலங்களிலும், இந்த வருடத்தின் ஆரம்ப காலங்களிலும் வெனேசுவேலாவின் சில இராணுவ அதிகாரிகளும், அமெரிக்காவின் அதிகாரிகளும் சந்தித்து இராணுவ கவிழ்ப்பு மூலம் அமெரிக்க ஆதரவு ஆட்சியை அங்கு அமைக்க திட்டங்களை ஆராந்துள்ளனர்.
.
ஆனாலும் சில அமெரிக்க அதிகாரிகள், அமெரிக்காவின் உதவியுடன் இடம்பெற்ற முன்னைய இராணுவ கவிழ்ப்புகள் அடைந்த தோல்விகளை காரணம் காட்டி, கவிழ்ப்பை நிராகரித்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
.
வெனேசுவேலா ஜனாதிபதியை (Maduro) படுகொலை செய்யும் நோக்கில் கடந்த மாதம் 4ஆம் திகதி (August 4th) வெடிமருந்துகள் தாங்கிய ஒரு drone அவருக்கு மேலே வெடித்து இருந்தது. ஆனால் Maduro அந்த தாக்குதலில் இருந்து தப்பியிருந்தார். கடந்த வருடம் களவாடப்பட்ட ஹெலி ஒன்றில் இருந்தும் அந்நாட்டின் உயர் நீதிமன்றம் மீதும் தாக்குதல் செய்யப்பட்டு இருந்தது.
.
தற்போதை ஜனாதிபதி Maduro வும், அவரின் கட்சியை சார்ந்த முன்னைய ஜனாதிபதியும் அமெரிக்காவின் பரம எதிரிகள் ஆவர்.
.
எண்ணெய் விலை வீழ்ந்தாலும், அமெரிக்காவின் தடைகள் காரணமாகவும் அங்கு பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனால் அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்கும், மேற்கு நாடுகளுக்கும் நகர ஆரம்பித்துள்ளனர்.

.