​ ​ரஷ்ய வேவு விமானம் வீழ்ந்தது, வீழ்த்தியது ​யார்?

RussianMoD

சிரியாவின் Mediterranean கடலோரம், சுமார் 35 km கடலின் உள்ளே, 15 படையினருடன் பறந்த ரஷ்யாவின் Ilyushin II-20 வகை வேவு பார்க்கும் யுத்த விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. திங்கள் வீழ்ந்த இந்த விமானம் இதுவரை கண்டு கொள்ளப்படவில்லை. அத்துடன் யார் இந்த விமானத்தை சுட்டது என்பதுவும் இதுவரை அறியப்படவில்லை.
.
ஆரம்பத்தில் இஸ்ரேல், சிரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் மீது சந்தேகம் கொண்டிருந்தாலும், தொடர்ச்சியாக நிகழ்ந்த பல சம்பவங்கள் இந்த விமான வீழ்ச்சிக்கு காரணமாக அமைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அது உண்மையையாயின் ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏவுகணையும் ரஷ்ய தயாரிப்பான S-200 வகையினதாக இருக்கும்.
.
இஸ்ரேலின் யுத்த விமானங்கள் சில வீழ்ந்த ரஷ்ய விமானத்தின் பின்னால் மறைந்து சிரியாவை நோக்கி சென்றவேளை, இஸ்ரேலின் விமானத்தை சிரியா ஏவுகணையால் சுட்டபோது அது குறி தவறி ரஷ்ய விமானத்தை வீழ்த்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
.
ரஷ்யா தேடுதலையும், விசாரணையையும் ஆரம்பித்து உள்ளது.
.
படம்: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு

.