​Semiconductor உலக ஆளுமைக்கு சீனா முனைவு

Qualicomm

உலகமெல்லாம் Made in China என்று பதியப்பட்டு சீனாவின் smartphone வகை தொலைபேசிகள் விற்பனை செய்யப்பட்டாலும், அவற்றுள் இருக்கும் processor (chip) போன்ற சில முக்கிய பாகங்களின் (parts) உரிமையை Qulacomm, Intel போன்ற அமெரிக்காவின் நிறுவனங்களே தற்போது கொண்டுள்ளன. அண்மையில் அமெரிக்காவின் ஜனாதிபதி ரம்ப், சீனாவை தண்டிக்கும் நோக்கில், அமெரிக்காவின் Qualicomm நிறுவனம் சீனாவின் ZTE என்ற smartphone தயாரிக்கும் நிறுவனத்துக்கு semiconductor விற்பனை செய்யக்கூடாது என்று தடை விதித்தார். அதனால் ZTE நிறுவனம் தனது செயல்பாடுகளை இடைநிறுத்தம் செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.

.
2017 ஆம் ஆண்டில் மட்டும் சீன smartphone நிறுவனங்கள் $260 பில்லியன் ($260,000 மில்லியன்) பெறுமதியான semiconductor களை இறக்குமதி செய்துள்ளன. அது சீனாவின் மொத்த பயன்பாட்டின் 80% ஆகும். மிகுதி 20% மட்டுமே சீனாவில் தயாரிக்கபட்டவை. 2025 ஆம் ஆண்டளவில் சீனா தனது 40% பாவனையை சீன chips மூலம் நிவர்த்தி செய்ய முனைகிறது.
.
அமெரிக்காவின் ஆளுமையில் உள்ள semiconductor சந்தையில் இருந்து சீனாவை பாதுகாக்க சீன அரசு பெரும் முயற்சிகளை செய்து வருகிறது. மேற்கு நாடுகளில் இருந்து இருந்து முன்னாள் சீன semiconductor அறிவாளிகளை பெரும் பணம் வழங்கி சீனாவுக்கு அழைக்கிறது சீன அரசு.
.
அத்துடன் தாய்வானில் (Taiwan) இருந்தும் chip அறிவாளிகளை கவர்ந்து எடுக்கிறது சீன அரசு. இந்த வருடத்தில் மட்டும் 300 chip துறையில் வல்லமை கொண்டவர்களை சீனா தன் பக்கம் இழுத்துள்ளது. இந்த 300 பேரும், ஏற்கனவே கவரப்பட்ட 1,000 பேருடன் இணைந்துள்ளார். ஒரு தாய்வான் நாட்டவருக்கு தாய்வானில் அவர் பெற்ற ஊதியத்தின் இரண்டு மடங்கை ஊதியமாக வழங்கி, அத்துடன் அவரின் 5 வயது மகனின் படிப்புக்கும் வருடாந்தம் $8,689 வழங்குகிறது அரச உரிமை கொண்ட சீன நிறுவனம். சிலருக்கு குறைந்த விலையில் வீடுகள் கொள்வனவு செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
.
தற்போது சீனாவில் சுமார் 400,000 பேர் chip துறையில் பணியாற்றுகின்றனர். அனால் 2020 ஆம் ஆண்டளவில் அங்கு சுமார் 720,000 பணியாற்றுவர் சென்று கணிப்பிடப்பட்டுள்ளது.
.