10 ஆண்டுகளில் ரம்ப் செலுத்திய வருமான வரி பூச்சியம்

10 ஆண்டுகளில் ரம்ப் செலுத்திய வருமான வரி பூச்சியம்

2000 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான 15 ஆண்டு காலத்தில், 10 ஆண்டுகளில் அமெரிக்க சனாதிபதி செலுத்திய வருமான வரி பூச்சியம் என்கிறது The New York Times பத்திரிகை. அதேகாலத்தில் சராசரி அமெரிக்கர் செலுத்தும் வருமான வரி ஆண்டுக்கு $10,500.00.

சனாதிபதியா தெரிவு செய்யப்பட்ட ஆண்டான 2016 ஆம் ஆண்டிலும், 2017 ஆம் ஆண்டிலும் ரம்ப் செலுத்திய வருமான வரி $750.00 மட்டுமே.

இந்த தரவுகளை எவ்வாறு The New York Times பெற்றது என்பதை கூறவில்லை. சனாதிபதி ரம்ப் மேற்படி தரவுகள் பொய் என்று கூறியுள்ளார். ஆனாலும் தனது தரவுகளை வெளியிடவும் அவர் மறுத்து வருகிறார்.

2018 ஆம், 2019 ஆம் ஆண்டுகளுக்கான ரம்பின் வருமான வரி விபரங்கள் New York Times பத்திரிகைக்கு கிடைக்கவில்லை.