10 வருடங்களில் விண்கல்லில் தரையிறங்கிய Philae

Philae

European Space Agency (ESA) சுமார் 10 வருடங்களுக்கு முன் ஏவிய Philae என்ற விண்கலம் 67P/Churyumov–Gerasimenko என்ற விண்கல்லில் இன்று தரை இறங்கியுள்ளது. இந்த தரை இறங்கல் signal களை ஆஜென்ரீனாவில் உள்ள ESA இனது விண்ணாய்வு நிலையமும், ஸ்பெயினில் உள்ள NASAவின் நிலையமும் பெற்றுள்ளன.
.
விண்கல்லில் தரையிறங்கிய இந்த கலத்தை எடுத்துச்சென்ற Rosetta என்ற கலம் 2004-March-2 அன்று ஏவப்பட்டிருந்தது. இது மொத்தம் 6.4 பில்லியன் Km பயணித்து 2014-Aug-6 அன்று 510 மில்லியன் Km தொலைவில் உள்ள மேற்படி விண்கல்லின் orbit ஐ அடைந்திருந்தது. பின் தரை இறங்குவதற்கான இடம் அடையாளம் காணப்பட்டு Philae தரை இறக்கப்பட்டது.
.
2015-Aug-13 அன்று மேற்படி விண்கல் சூரியனுக்கு மிக அண்மையில் (185 மில்லியன் Km) இருக்கும். அப்போது Philae பல ஆய்வுகளை செய்யும். Philae சுமார் 100 Kg எடை கொண்டது.
.
மேற்படி விண்கல் 135,000 Km/h  வேகத்தில் நகர்ந்துகொண்டுள்ளது. இதன் ஆகக்கூடிய நீளம் 4.1 Km.
.

படம்: www.esa.int