பைடெனுக்கு எதிரான Uncommitted வாக்கு வலுவடைகிறது

பைடெனுக்கு எதிரான Uncommitted வாக்கு வலுவடைகிறது

பெப்ரவரி 27ம் திகதி அமெரிக்காவின் Michigan மாநிலத்தில் இடம்பெற்ற Democratic கட்சியின் உட்கட்சி தேர்தலில் 13% பேர் பைடெனுக்கு ஆதரவு வழங்க மறுத்து, Uncommitted வகைக்கு வாக்களித்து இருந்தனர்.

காசா யுத்தத்தில் பைடென் இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமான ஆதரவு வழங்குவதே பைடென் மீதான வெறுப்புக்கு காரணம்.

ஒரு பிரதான swing state ஆனா Michigan மாநிலத்தில் 101,436 பேர் பைடெனுக்கு ஆதரவு வழங்க மறுப்பது பைடெனுக்கு ஆபத்தானது. இங்கு இஸ்லாமிய/அரபு வாக்குகளே Uncommitted வகையில் அதிகம்.

மார்ச் 5ம் திகதி Super Tuesday அன்று நடைபெற்ற Democratic கட்சியின் உட்கட்சி தேர்தலில் மேலும் பல மாநிலங்களில் அதிகப்படியான வாக்குகள் Uncommitted வகைக்கு கிடைத்துள்ளன.

Minnesota மாநிலத்தில் 19% Democratic கட்சியினர் பைடெனுக்கு வாக்களிக்க மறுத்து, Uncommitted வகைக்கு வாக்களித்து உள்ளனர்.

இஸ்லாமியர் குறைவாக உள்ள North Carolina மாநிலத்தில் 13% Democratic கட்சியினர் பைடெனுக்கு ஆதரவு வழங்க மறுத்து No Preference வகைக்கு வாக்களித்து உள்ளனர்.

Massachusetts மாநிலத்தில் 9% Democratic கட்சியினர் No Preference வகைக்கு வாக்களித்து உள்ளனர்.