159 மணித்தியால overtime, நிருபர் மரணம்

NHK

ஜப்பானில் மாதம் ஒன்றுக்கு 159 மணித்தியாலங்கள் overtime செய்த செய்தியாளர் இருதய பாதிப்பால் (congestive heart failure) மரணம் அடைந்துள்ளார். ஜப்பானிய அரச கட்டுப்பாடில் இயங்கும் NHK (Nippon Hoso Kyokai) என்ற செய்தி நிறுவனத்தில் கடமை புரிந்த, 31 வயதுடைய,  Miwa Sado என்பரே இவ்வாறு மரணமாகி உள்ளார்.
.
2013 ஆம் ஆண்டு Tokyo மாநகர தேர்தலின் போதே இந்த சம்பவம் நிகழ்துள்ளது. ஆனாலும் அந்த உண்மை தற்போதே உறுதியாகி வெளிவந்துள்ளது.
.
அதேவேளை Dentsu என்ற ஜப்பானிய விளம்பர நிறுவனத்துக்கு சுமார் $4,400 தண்டம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் சட்டத்துக்கு முரணான வகையில் தனது ஊழியர்களை overtime செய்ய பணித்ததாம். அவர்களுள் ஒருவரான 24 வயதுடைய புதிய ஊழியர் ஒருவர் 2015 ஆண்டு வேளை அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து இருந்தார்.
.
ஜப்பானிய மொழியில் இவ்வகை மரணம் ‘karoshi’ (மிகையான வேலை மூலமான மரணம்) என்று அழைக்கப்படுகிறது.
.
2015 ஆம் ஆண்டில் மொத்தம் 189 பேர் மிகையான வேலை காரணமாக மரணித்ததாக அரசு கணித்துள்ளது. அதில் 93 தற்கொலை செய்தும், 96 பேர் இருதய பாதிப்பால் மரணித்தும் உள்ளனர். ஆனால் அங்கு பலரும் இவ்வகை மரணத்தொகை அரசு கூறும் தெகையிலும் அதிகம் என்கின்றனர்.
.
வேலை பறிபோகாமல் இருக்க பல ஊழியர் தமது விடுமுறைகளையும் பயன்படுத்துவது இல்லையாம். ஜப்பானில் 20% நிறுவனங்களில் ஊழியர்கள் மாதம் ஒன்றில் 80 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக overime செய்கிறார்கள். இன்னோர் 20% ஊழியர்கள் 49 முதல் 80 மணித்தியாலங்கள் overtime செய்கிறார்கள். அமெரிக்காவில் இவ்வாறு overtime செய்வோர் வீதம் 16.4% மட்டுமே. பிரித்தானியாவில் இது 12.5%. ஜேர்மனியில் இது 10.1% மட்டுமே.

.