16 ஆண்டுகளாக வீழ்ச்சி அடையும் ஜப்பானின் சனத்தொகை 

16 ஆண்டுகளாக வீழ்ச்சி அடையும் ஜப்பானின் சனத்தொகை 

ஜப்பானின் சனத்தொகை கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. 2024ம் ஆண்டின் சனத்தொகை 2023ம் ஆண்டின் சனத்தொகையிலும் 908,574 (0.75%) ஆல் குறைந்து உள்ளது என்கிறது புதன்கிழமை அரசு வெளியிட்ட அறிக்கை.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் அங்கு 120,653,227 ஜப்பானியர் இருந்துள்ளனர். அங்கு வாழும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையையும் உள்ளடக்கிய சனத்தொகை 124,330,690 ஆக இருந்துள்ளது.

கடந்த ஆண்டு 687,689 ஜப்பானிய குழந்தைகள் பிறந்து உள்ளனர். இத்தொகை முன்னைய ஆண்டிலும் 41,678 குறைவு.

அங்கு ஜப்பானியர் தொகை குறைந்து சென்றாலும், வெளிநாட்டவர் தொகை அதிகரித்து வருகிறது. ஜனவரி மாதம் அங்கு 3,677,463 வெளிநாட்டவர் இருந்துள்ளனர். இத்தொகை முன்னைய ஆண்டிலும் 354,089 (10.65%) அதிகம். 

போதிய ஜப்பானிய தொழிலாளர் இல்லாமையாலேயே வெளிநாட்டவர் அங்கு அழைக்கப்படுகின்றனர். இது பொதுவாக வளர்ச்சி அடைந்த நாடுகள் எல்லாம் எதிர்கொள்ளும் வளர்ச்சியின் பக்க விளைவு.