1917ம் ஆண்டுக்கு பின் Aaa கடன் நாணயத்தை இழந்த அமெரிக்கா

1917ம் ஆண்டுக்கு பின் Aaa கடன் நாணயத்தை இழந்த அமெரிக்கா

உலகின் 3 பிரதான rating அமைப்புகளில் ஒன்றான Moody’s வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் கடன் வழங்கலுக்கான நாணயத்தை அல்லது உத்தரவாத அளவை அதி உயர்ந்த Aaa தரத்தில் இருந்து இரண்டாம் தரமான Aa1 க்கு குறைத்து உள்ளது. Moody 1917ம் ஆண்டு முதல் அமெரிக்காவுக்கு வழங்கி வந்திருந்த Aaa நாணய சான்றிதழை வெள்ளி பறித்துள்ளது.

அமெரிக்காவில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் அரச செலவை கட்டுப்படுத்தவில்லை என்றும் அதனால் அரச கடனும், அதற்கான வட்டி செலவும் வேகமாக அதிகரித்து வருவதாக Moody காரணம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்காவின் மொத்த கடன் அமெரிக்க GDP யின் 98% ஆக இருந்தது என்றும், 2035ம் ஆண்டில் இது 134% ஆகும் என்றும் Moody கூறியுள்ளது.

மற்றைய இரண்டு rating அமைப்புகளான S&P Global அமைப்பும், Fitch அமைப்பும்  முறையே 2011ம், 2023ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் கடன் நாணயத்தை குறைத்து இருந்தன.