1966 இல் வீழ்ந்த இந்திய விமான பத்திரிகை கண்டெடுப்பு

AirIndia_101

1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி மும்பாயில் (அன்றைய Bombay) இருந்து பிரித்தானியாவின் லண்டன் நகர் சென்ற Air India விமான சேவையான Flight 101 ஜெனீவாவில் தரை இறங்கிவதற்கு முன் Frech Alps மலை பகுதியில் மோதி விபத்துக்கு உள்ளானது. அதனால் அதில் பயணித்த 117 பேரும் (பயணிகள் 106, பணியாளர் 11) பலியாகி இருந்தனர்.
.
இந்த விமானம் டெல்லி, பெய்ரூட் (லெபனான்), ஜெனீவா (சுவிற்சலாந்து) ஆகிய நகரங்களில் இறங்கி செல்ல இருந்தது. ஆனால் ஜெனீவாவில் இறங்குமுன் மோதி இருந்தது.
.
அப்பகுதியில் உணவகம் ஒன்றை வைத்திருக்கும் Timothee Mottin என்பவர் மேற்படி பத்திரிகைகளை கண்டெடுத்து உள்ளார். அப்பகுதி glacier (இறுகிய snow) உருகி வருவதால் ஆழத்தில் இருந்த இந்த பத்திரிக்கை வெளியே தெரிந்து உள்ளது.
.
அந்த பத்திரிக்கை ஒன்றில் இந்திரா காந்தி மொராஜி தேசாயை வென்றது முன்பக்க செய்தியாக வெளிவந்து உள்ளது.
.
இப்பகுதியில் இருந்து 2013 ஆம் ஆண்டு பெட்டி ஒன்றில் இருந்த emeralds, sapphires, rubies போன்றவை கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் பெறுமதி $147,000 முதல் $279,000 வரையில் இருக்கும் என்று கணிப்பிடப்பட்டு இருந்தது.
.
இந்த விபத்துக்கு விமானி தொலைத்தொடர்புகளை தவறாக புரிந்து கொண்டமையே காரணம் என்று கூறப்பட்டாலும், CIA வைத்து குண்டே காரணம் என்ற செய்திகளும் உண்டு. இந்த விமானத்தில் பயணித்து பலியான Homi Bhabha இந்தியாவின் அணுசக்தி ஆய்வின் தந்தை என கூறப்படுபவர். 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா அணுகுண்டு தயாரிக்க உள்ளது என்று Bhabha All India Radio வுக்கு கூறி இருந்தார்.
.
இந்த விபத்துக்கு 13 நாட்களுக்கு முன் இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி (Lal Bahadur Shastri) Uzbekistan தலைநகர் Tashkent இல் பலியாகி இருந்தார். அவரின் மரணம் இன்றுவரை ஒரு மர்மமாகவே உள்ளது. அவரும் CIA யினால் படுகொலை செய்யப்படார் என்ற செய்திகளும் உண்டு. இந்தியா சாஸ்திரி மரண காரணத்தை முறைப்படி வெளியிடவில்லை.
.
1950 ஆம் ஆண்டு ஏறக்குறைய இதே இடத்தில் Air India Fllight 245 வீழ்ந்து இருந்தது. அதில் பயணித்த 48 பேரும் பலியாகி இருந்தனர்.
.