$2.1 பில்லியன் Wirecard களவு பிலிப்பீனில் இடம்பெறவில்லை

Wirecard

இன்று திங்கள் ஜெர்மனியின் Wirecard நிறுவனம் தற்போது காணப்படாது உள்ள $2.1 பில்லியன் எந்தவிடத்திலும் இல்லை என்று ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் பிலிப்பீன் வங்கிகளுக்கு அந்த பணம் சென்றதாக கூறும் Wirecard ஆவணங்கள் பொய்யானவை என்பதுவும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
.
Wirecard நிறுவனத்தின் CEO Markus Braun வெள்ளிக்கிழமை தனது பதவியில் இருந்து விலகி இருந்தார்.
.
இந்த நிறுவனத்தின் பங்குச்சந்தை பங்கு ஒன்றின் விலை கடந்த 3 தினங்களில் 85% ஆல் வீழ்ந்து இருந்தது. திங்கள் மட்டும் இதன் விலை சுமார் 46% ஆல் வீழ்ந்து இருந்தது. அதனால் சுமார் $12.5 பில்லியன் பெறுமதியை பங்கு உரிமையாளர் இழந்து உள்ளனர். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் $213.00 பெறுமதியில் இருந்த பங்கு ஒன்றின் தற்போதுதைய விலை $14.56 மட்டுமே.
.
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் Financial Times பத்திரிகை Wirecard நிறுவனம் தனது கணக்கியலில் குளறுபடி செய்கிறது என்று கூறி இருந்தாலும், அப்போது Wirecard அதை மறுத்து இருந்தது. Financial Times மீண்டும் ஒருமுறை Wirecard தனது வருமானத்தையும், இலாபத்தையும் பெருபித்து காட்டுகிறது என்று கூறி இருந்தது. அப்போது சிங்கப்பூர் அதை விசாரணை செய்வதாக கூறி இருந்தது.
.
1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, தற்போது சுமார் 26 நாடுகளில் இயங்கும் Wirecard நிறுவனத்தில் 6,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். மக்கள் credit card அல்லது debit card மூலம் கொள்வனவுகளை செய்யும்போது Wirecard போன்ற நிறுவனங்களே அந்த பண பரிமாறல்களை செய்யும்.
.