ஒரு ஆண்டில் $200 பில்லியனை இழந்தார் Elon Musk

ஒரு ஆண்டில் $200 பில்லியனை இழந்தார் Elon Musk

Tesla என்ற மின்சார சக்தியில் இயங்கும் கார் நிறுவனத்தை ஆரம்பித்த இலான் மஸ்க் (Elon Musk) தான் உச்ச செல்வந்த காலத்தில் கொண்டிருந்த பெறுமதியில் சுமார் $200 பில்லியனை தற்போது இழந்துள்ளார். Tesla நிறுவனத்தின் பங்ச்சந்தை பெறுமதி வீழ்ச்சி அடைந்ததே இவரின் செல்வம் வீழ்ச்சி அடைய முதல் காரணி.

தற்போது இலான் உலகத்தில் இரண்டாவது பெரிய செல்வந்தர். முதலாவது பெரிய பணக்காரராக பிரஞ்சு வர்த்தகர் Bernard Arnault உள்ளார்.

2021ம் ஆண்டு நவம்பர் மாதம் இலான் $340 பில்லியன் வெகுமதியாக செல்வத்தை கொண்டிருந்தார். அனால் அவரிடம் தற்போது $137 பில்லியன் மட்டுமே உள்ளது.

Tesla நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை அது கொண்டிருந்த உச்ச விலையில் இருந்து தற்போது சுமார் 65% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அத்துடன் இலான் $44 பில்லியன் பெறுமதியான Tesla பங்கை விற்பனை செய்து அந்த பணத்தில் Twitter நிறுவனத்தை கொள்வனவு செய்திருந்தார். அந்த நிறுவனமும் பெறுமதியயை இழந்து உள்ளது.

இலான், Amazon நிறுவனத்தை ஆரம்பித்த Jeff Bezos ஆகிய இருவரும் மட்டுமே உலகில் $200 பில்லியன் சொத்துக்கு மேல் சொல்வதை கொண்டிருந்தவர்கள். ஆனால் இருவரின் சொத்துக்களும் தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளன.

இலான் முதலில் PayPal நிறுவனம் மூலம் பெருமளவு செல்வதை பெற்று இருந்தார். இவரே பின்னர் SpaceX, Starlink போன்ற பல நிறுவனங்களை ஆரம்பித்தவர்.

தென் ஆபிரிக்காவில் 1971ம் ஆண்டு பிறந்த இலான் தனது தாய் வழி கனடிய தொடர்பால் 1989ம் ஆண்டு கனடா சென்று Kingston நகரில் உள்ள Queens பல்கலைக்கழகத்தில் தனது உயர் படிப்பை ஆரம்பித்து, பின் University of Pennsylvania சென்றார். மொத்தம் 3 தடவைகள் திருமணம் செய்து, 3 தடவைகளும் விவாகரத்து பெற்ற இவருக்கு 10 பிள்ளைகள் உண்டு.

பங்குச்சந்தை பெறுமதி சாதாரண பணம் போல் திடமானது அல்ல. பங்கின் பெறுமதி விரைவாக கூடி, குறையும்.