2011 ஆம் ஆண்டுக்கு பின் சொந்த கலத்தில் அமெரிக்கர் விண்ணுக்கு

Falcon9

2011 ஆம் ஆண்டுக்கு பின் இன்று சனிக்கிழமை தமது சொந்த ஏவு கலம் ஒன்றில் இரண்டு அமெரிக்கர் விண்ணுக்கு சென்றுள்ளனர். அமெரிக்காவின் தனியார் நிறுவனமான SpaceX தயாரித்த Falcon 9 என்ற ஏவு கலத்தில் (booster) International Speace Station னுக்கு இவர்கள் சென்றுள்ளனர்.
.
புதன் கிழமை பயணிக்க இருந்த பயணம் பாதகமான காலநிலை காரணமாக இன்றுவரை பின்தள்ளப்பட்டு இருந்தது. காலநிலை சாதகமாக Florida நேரப்படி பிற்பகல் 3:22 மணிக்கு இவர்கள் கலம் மேலே ஏவப்பட்டது.
.
இது ஒரு two-stage ஏவு கலமாகும். முதலாவது ஏவலை செய்த Falcon 9 என்ற 70 மீட்டர் நீளமும், 3.7 மீட்டர் அகலமும், 549,054 kg எடையும் கொண்ட பாகம் சுமார் 3.5 நிமிடங்களுள் இரண்டாவது பாகத்தை ஏவியபின், பிற்பகல் 3:46 மணிக்கு பத்திரமாக தரையிறங்கு கப்பல் ஒன்றில் இறங்கி உள்ளது. இப்பக்கம் மீண்டும் எதிர்காலங்களில் மீள்பாவனை செய்யப்படும். அதன் மூலம் செலவு கட்டுப்படுத்தப்படும்.
.
இரண்டு பயணிகளையும் காவும் இரண்டாம் பாகம் ஞாயிற்று கிழமை International Space Station உடன் இணைந்து பயணிகளை பரிமாறும்.
.
தமது Space Shuttle விபத்துகளுக்கு உள்ளன காரணத்தால் கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்கர் ரஷ்யாவின் Soyuz ஏவு கலம் மூலமே International Space Station சென்று வந்தனர். ஒரு அமெரிக்கரை தனது Soyuz கலத்தில் காவ ரஷ்யா சுமார் $90 மில்லியன் கட்டணத்தை ஆறவிட்டு இருந்தது.
.