2018 ஆண்டு இடம்பெறவுள்ள FIFA World Cup போட்டியின் இறுதி ஆட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இத்தாலி. இதற்கு முன் 1958 ஆம் ஆண்டிலும் இத்தாலி FIFA World Cup இறுதி ஆட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்திருந்திருந்தது. இத்தாலி முன்னர் 4 தடவைகள் FIFA World Cup வெற்றியை பெற்றிருந்த முக்கியதோர் உதைபந்தாட்ட நாடு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
.
சுவீடன் (Sweden) அணியும் இத்தாலி (Italy) அணியும் ஆடிய ஆட்டம் வெற்றி-தோல்வி இன்றி (0-0) முடிவடைந்ததால் இத்தாலி உலகக்கிண்ண இறுதி ஆட்டங்களுக்கு போகும் வாய்ப்பை இழந்துள்ளது. பதிலாக சுவீடன் இறுதி ஆட்டங்களில் பங்குகொள்ளும்.
.
இத்தாலிக்கு, சுவீடனுக்கும் இடையேயான இந்த போட்டி இத்தாலியின் San Siro நகரில், சுமார் 74,000 இத்தாலிய அணியின் ஆதரவாளர் முன் இடம்பெற்றது. அப்போதே இத்தாலி இந்த கவலைக்கிடமான முடிவுக்கு தள்ளப்பட்டது.
.
அமெரிக்கா, சிலே (Chile), நெதர்லாந்து ஆகிய முக்கிய உதைபந்தாட்ட நாடுகளும் 2018 போடியில் பங்குகொள்ள தவறியுள்ளன.
.
2018 ஆண்டுக்கான FIFA உலகக்கிண்ண போட்டிகள் ரஷ்யாவில் இடம்பெறும். 2022 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் கட்டாரில் (Qatar) இடம்பெறும்.
.