2020 ஆம் ஆண்டின் முன்னணி பல்கலைக்கழகங்கள்

2020 ஆம் ஆண்டின் முன்னணி பல்கலைக்கழகங்கள்
உலகில் பல அமைப்புகள் உலக அளவில் பல்கலைக்கழகங்களை மதிப்பீடு செய்கின்றன. அவற்றின் மதிப்பீட்டு முறைமைகள் ஒன்றில் இருந்து மற்றையது வேறுபடும். Times Higher Education தயாரித்த 2020 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டில் University of Oxford உலக அளவில் முதலாம் இடத்தில் உள்ளது. இதில் 41% மாணவர்கள் வெளிநாட்டவர். California Institute of Technology இரண்டாம் இடத்திலும் (30% மாணவர் வெளிநாட்டவர்), University of Cambridge மூன்றாம் இடத்திலும் (37% மாணவர் வெளிநாட்டவர்) உள்ளன.
.
Stanford, MIT, Princeton, Harvard, Yale, University of Chicago, Imperial College London ஆகியன 4 ஆம் இடம் முதல் 10 ஆம் இடங்களை முறையே கொண்டுள்ளன. முதல் 20 பல்கலைக்கழகங்களில் 15 அமெரிக்காவிலும், 3 பிரித்தானியாவிலும், கனடா, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளில் ஒவ்வொன்றும் உள்ளன. கனடாவின் University of Toronto 18 ஆம் இடத்தில் உள்ளது.
.
ஆசிய பல்கலைக்கழகங்களில் முன்னணியில் உள்ளது சீனாவின் Tsinghua Unviversity. இது 23 ஆம் இடத்தில் உள்ளது. Peking  University 24 ஆம் இடத்தில் உள்ளது. அத்துடன் 80 ஆம், 107 ஆம், 109 ஆம், 144 ஆம், 157 ஆம் இடங்களிலும் சீன பல்கலைக்கழகங்கள் உள்ளன.
.
National University of Singapore 25 ஆம் இடத்தில் உள்ளது. University of Hong Kong 35 ஆம் இடத்தில் உள்ளது. The University of Tokyo 36 ஆம் இடத்தில் உள்ளது.
.
இலங்கையின் University of Peradeniya 401 முதல் 500 வரையான இடங்களை கொண்ட குழுவுக்குள் உள்ளது. University of Colombo 1001 க்கு மேற்பட்ட குழுவுக்குள் உள்ளது.
.
இந்தியாவின் Indian Institute of Science, Indian Institute of Technology Ropar ஆகிய இரண்டும் 301 முதல் 350 வரையான இடங்களை கொண்ட குழுவுக்குள் உள்ளன. Jawaharlal Nehru University 601-800 குழுவுக்குள் உள்ளது.
.