2030 ஆம் ஆண்டில் சீன நாணயம் மூன்றாம் இடத்தில்

2030 ஆம் ஆண்டில் சீன நாணயம் மூன்றாம் இடத்தில்

2030 ஆம் ஆண்டு அளவில் சீனாவின் நாணயமான யுவான் (yuan) உலக அளவில் மூன்றாவது பிரதான நாணயம் ஆகும் என்கிறது அமெரிக்காவின் முதலீட்டு வங்கியான Morgan Stanley.

தற்போது வெளிநாட்டவரின் சீனாவுள்ளான முதலீடு $409 பில்லியன் என்றும், இத்தொகை 2030 ஆம் ஆண்டு அளவில் $3 டிரில்லியன் ($3,000 பில்லியன்) ஆக உயரும் என்றும் Morgan Stanley கூறுகிறது.

தற்போது உலக அளவில் 2.16% வர்த்தகம் மட்டுமே யுவான் மூலம் செய்யப்படுகிறது. ஆனால் 2030 ஆம் ஆண்டு அளவில் இது 5% முதல் 10% வரையாக அதிகரிக்கும் என்கிறது Morgan Stanley யின் ஆய்வு.

இன்று உலக வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள முதல் 10 நாணயனங்கள் வருமாறு: அமெரிக்க டாலர் 44.15% பாவனை, யூரோ (Euro) 6.14% பாவனை, ஜப்பான் ஜென் (Yen) 8.40% பாவனை, பிரித்தானிய பவுண்ட்ஸ் (pound) 6.40%, அஸ்ரேலிய டாலர் 3.38%, கனடிய டாலர் 2.52%, சுவிஸ் பிராங்க் (franc) 2.48%, சீன யுவான் 2.16%, ஹாங் காங் டாலர் 1.77%, நியூசிலாந்து டாலர் 1.04%.

தற்போது தினமும் சுமார் $2.9 டிரில்லியன் பெறுமதியான உலக வர்த்தகங்கள் அமெரிக்க டாலர் மூலம் செய்யப்படுகிறது. சுமார் $1.1 டிரில்லியன் பெறுமதியான வர்த்தகங்கள் யூரோ மூலம் செய்யப்படுகிறது. சுமார் $554 பில்லியன் வர்த்தகம் ஜப்பானின் நாணயம் மூலம் செய்யப்படுகிறது. சுமார் $142 பில்லியன் வர்த்தகம் மட்டுமே சீனாவின் யுவான் மூலம் செய்யப்படுகிறது.

அமெரிக்க டாலரில் தங்கி இருப்பதை சீனா மெல்ல தவிர்க்க முனைகிறது. அவ்வாறு செய்வதன் மூலம் மேற்கு நாடுகளை தளமாக கொண்ட சர்வதேச வங்கிகளில் இருந்தும் சீனா விடுபட முடியும். அது சீனா மீது தடைகள் விதிக்கப்படுவதை முறியடிக்கும்.