2032 இல் சீன பொருளாதாரம் முதலிடத்தில்

2032_World_Economy

பிரித்தானியாவின் லண்டன் நகரை தளமாக கொண்ட Centre for Economics and Business (CEBR) அண்மையில் வெளியிட்ட ஆய்வு கட்டுரை ஒன்றில், 2032 ஆம் ஆண்டளவில் சீன பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்தை பின் தள்ளி உலகின் முதலாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் உலகின் மிக பெரிய 4 பொருளாதாரங்களில் 3 ஆசியாவில் இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
.
தற்போது உலகின் முதலாவது பெரிய பொருளாதாரமாக அமெரிக்க பொருளாதாரமும், இரண்டாவதாக சீன பொருளாதாரமும் உள்ளன. இந்நிலை 2027 ஆம் ஆண்டுவரை தொடரும். பின் சீனா படிப்படியாக முதலாவது இடத்தை கைப்பற்ற, அமெரிக்கா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படும்.
.
தற்போது 7ஆம் இடத்தில் உள்ள இந்திய பொருளாதாரம் அடுத்த வருடம் 5 ஆம் இடத்தை அடைந்து, பின் 2027 ஆம் அண்டாவில் 3 ஆம் இடத்தை அடையும்.
.
2032 ஆம் ஆண்டளவில் பிரித்தானியாவின் பொருளாதாரம் 7 ஆம் இடத்திலும், பிரான்ஸ் 9 ஆம் இடத்திலும், கனடா 12 ஆம் இடத்திலும், இத்தாலி 13 ஆம் இடத்திலும் இருக்கும்.
.