2032 ஒலிம்பிக்கை நடாத்த இந்தியா ஆவல்

India

2032 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடாத்த இந்தியா ஆவல் கொண்டுள்ளது. இந்தியாவின் ஒலிம்பிக் அமைப்பான Indian Olympic Association (IOA) 2032 ஆண்டுக்கான போட்டிகளை இந்தியாவில் நடாத்த முயற்சிக்கும் பணிகளுக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய அரசிடம் கேட்டுள்ளது. இந்த செய்தியை IOA தலைவர் ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார்.
.
இந்திய அரசு ஆதரவு வழங்கினும், 2032 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிகை நடாத்த வேறு நாடுகள் முன்வரின் அந்த நாடுகளுடன் போட்டியிட்டே இந்தியா உரிமையை பெற்ற வேண்டும்.
.
ஒரு பில்லியன் சனத்தொகையை கொண்ட இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் ஓரிரு பதக்கங்களை வெல்வதே இன்றுவரை அருமையாக உள்ளது. அத்துடன் ஊழல் காரணமாக இந்தியா அண்மையில் நடந்த ஒலிம்பிக் போட்டி ஒன்றில் பங்குகொள்வது தடை செய்யப்பட்டு இருந்தது. Suresh Kalmadi என்பவர் இந்த ஊழல் காரணமாக 9 மாதங்கள் சிறை சென்றிருந்தார்.
.

1900 ஆம் ஆண்டுமுதல், சுமார் 116 வருடங்களில், இந்தியா இதுவரை மொத்தம் 28 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. இந்தியாவுக்கு நிகரான சனத்தொகை கொண்ட சீனா 2016 ஒலிம்பிக் போட்டியில் மட்டும் 70 பதக்கங்களை வென்றிருந்தது. அதில் 26 தங்க பதக்கங்கள்.
.