2050 ஆம் ஆண்டில் 100% இலங்கையில் தூய சக்தி

UNDP

2050 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 100% தூய, சூழலுக்கு குந்தகம் விளைவிக்காத சக்தி பயன்படுத்தப்படும் என்று கணிக்கின்றன ஐ.நா. வின் UNDP (United Nations Development Program) அமைப்பும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் (ADB – Asian Development Bank)
.
UNDP அமைப்பும், ABD அமைப்பும் இணந்து வெளியிட்ட அறிக்கையில் இலங்கை 2050 ஆண்டளவில் சுமார் 34 Gigawatt 34,000 MW) சக்தியை உட்கொள்ளும் என்றும் அதில் 15 Gigawatt காற்றினால் உருவாக்கப்டும் சக்தி (wind energy) என்றும், 16 Gigawatt சூரிய சக்தியில் (solar) இருந்து உருவாக்கப்படும் என்றும், மிகுதி நீர் மின்னாகவும், உயிரியல் சார்பானதாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
.
இலங்கையின் தூய சக்தி திட்டங்களுக்கு ADB உதவிகள் செய்யும் என்று கூறியுள்ளார் அதன் தெற்காசிய அதிகாரி பிரியந்த வியாதுங்க.
.
இலங்கை 100% தூய சக்தி உற்பத்தியை அடைய சுமார் $50 பில்லியன் முதலீடு தேவைப்படும் என்கிறது இந்த அறிக்கை.

.