சீராடை யற்ற வைரவன்

சீராடை யற்ற வைரவன்

SeeraadaiYatra

அந்தகக்கவி வீரராகவ முதலியார் பாடியது

பாடல்:
சீராடை யற்ற வைரவன் வாகனஞ் சேரவந்து
பாராரு நான்முகன் வாகனந் தன்னைமுன் பற்றிக்கௌவி
நாராயணனுயர் வாகன மாயிற்று நம்மைமுகம்
பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே

பல கருத்து சொற்கள்:
வைரவன் வாகனம் = நா ய்
சேரவந்து = கிட்டவந்து
பாராரும் = நிலத்திருந்த
நான்முகன்  வாகனம் = அன்னம் = சோறு
முன்பற்றிக் கௌவி = முந்திக்கொண்டு வாயில் எடுத்து
நாராயணண் வாகனம் = கருடன்
நம்மை முகம் பாரான் = நம்மிடத்தில் இரக்கம் காட்டாத
மை  வாகனன் = ஆடு வாகனன் அக்னிபகவான் = நெருப்பு

விளக்கம்:
அந்தக  கவிஞர் முன்னால் நிலத்திலிருந்த கட்டுச்சோற்றை நாய் ஒன்று பருந்துபோல் கௌவிக்கொண்டு ஓடியதால்
அவரின் வயிறு பசியால் கொதித்ததாகக் கூறப்படுகிறது