227 பயணிகளுடன் தவறியுள்ள மலேசிய விமானம்

MalaysiaAir

மலேசிய நேரப்படி சனிக்கிழமை காலை 12:41 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட Malaysian Airlines விமானம் MH370 விமான போக்குவரத்து தொடர்புகளை இழந்துள்ளது. இதில் 227 பயணிகளும் 12 பணியாளரும் இருந்ததாக விமானசேவை நிறுவனம் கூறியுள்ளது. இது ஒரு Boeing 777-200 வகை விமானமாகும். இவ்வகை விமானம் 310 முதல் 450 பயணிகள் வரை கொள்ளக்கூடியது.

நேர அட்டவணைப்படி இந்த விமானம் பெய்ஜிங் நேரப்படி காலை 6:30 மணிக்கு பெய்ஜிங்கை அடைந்திருக்கும். ஆனால் விமானம் புறப்பட்டு சுமார் 2 மணித்தியாலத்தில் விமானத்துடனான தொடர்பு அற்றுப்போயுள்ளது. இந்த விமானத்தை தேடும் பணி ஆரம்பமாயுள்ளது.

Malaysian Airlines: +603 7884 1234