24 மில்லியன் தொழில் இழப்பு இடம்பெறலாம்

UN

கொரோனா வைரஸ் காணமாக உலக அளவில் சுமார் 24 மில்லியன் தொழிலாளர் தமது வேலைவாய்ப்பை இழக்க நேரிடலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை (UN) இன்று புதன் கூறியுள்ளது. ஐ. நாவின் International Labor Organization திடமாக வேலைவாய்ப்பு இழப்பை கணிக்க முடியாது என்றாலும், உலக அளவில் வேலைவாய்ப்பு இழப்பு 5.3 மில்லியன் முதல் 24.3 மில்லியன் என்று கூறுகிறது.
.
விமான சேவைகள், உல்லாச பயண துறைசார் நிறுவனங்கள் (Hotels), உணவு விடுதிகள், திரைப்பட நிலையங்கள், விளையாட்டு அரங்குகள் போன்ற வர்த்தகங்கள் உடனடியாக பாதிக்கப்பட்டு உள்ளன. அமெரிக்காவின் Las Vegas என்ற களியாட்ட நகரம் ஒரு மாதத்துக்கு மூடப்படுகிறது.
.
கொரோனா வரைஸின் தாக்கம் ஒரு சுகநல தாக்கம் மட்டும் என்ற நிலையை மீறி தற்போது அது ஒரு பொருளாதார தாக்கமாகவும் மாறி உள்ளது.
.
மாத ஊதியம் பெறுவோர் தொடர்ந்தும் சிலகாலம் வருமானத்தை கொண்டிருந்தாலும், தின கூலி வேலையாளர், உணவு விடுதி உரிமையாளர், பணியாளர் அனைவரும் தமது வருமானத்தை இழப்பர். அதனால் அவர்கள் தமது கொள்வனவுகளையும் குறைக்க பொருளாதாரம் மேலும் சரியும்.
.
தமது வேலைகளை இழப்போர் வீட்டு, கார் கட்டுமானங்களை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு பணம் வழங்கிய வங்கிகளும் நெருக்கடிக்கு உள்ளாகும்.
.