270 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின, 90 மரணித்தன

270 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின, 90 மரணித்தன

அஸ்ரேலியாவின் Tasmania பகுதியில் மணல் நிறைந்த, ஆழம் குறைந்த கரைக்கு வந்த 270 திமிங்கிலங்கள் (pilot whales) மீண்டும் சுயமாக ஆழ்கடல் செல்லமுடியாது தவிக்கின்றன. அவற்றில் 90 ஏற்கனவே பலியாகி உள்ளன. இதுவரை 25 திமிங்கிலங்களை மீனவரும், அதிகாரிகளும் ஆழ்கடலுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

Pilot whale கடல்வாழ் dolphin வகையை சார்ந்தது. இவை 7 மீட்டர் (23 அடி) நீளம் வரை வளரக்கூடியது. முதிர்ந்த இவ்வகை திமிங்கிலம் 3 தொன் எடையை கொண்டிருக்கும்.

இடருள் உள்ள பெரிய, பாரமான இந்த திமிங்கிலங்கை பாதுகாப்போர் அவற்றை படங்களில் ஏற்றி வள்ளங்கள் மூலம் ஆழ்கடலுக்கு இழுத்து செல்கின்றனர்.

இவ்வகை திமிங்கிலங்கள் ஆயிரம் வரை கொண்ட கூட்டமாக திரியும்.