3ம்-4ம் நூற்றாண்டு இந்திய சுவடியில் பூச்சியம்

BakhshaliManuscript

தற்கால கணிதத்தில் மிகமுக்கிய பாகம் தான குறிப்பீடு (place value) ஆகும். அந்த தானத்தை மெருகூட்ட தோன்றியது பூச்சிய குறியீடு. இந்த இரண்டையும் கொண்டதாலேயே இன்று நடைமுறையில் இருக்கும் கணித முறைமை உலகத்தில் இருந்த மற்றைய எல்லா கணித முறைமைகளையும் பின்தள்ளி முன்வந்தது.
.
இந்த தான குறிப்பீடும், பூச்சிய குறியீடும் எந்த கலாச்சாரத்தில் இருந்து தோன்றியது என்பதை நிரூபிக்க விஞ்ஞானம் தன்னால் முடிந்ததை செய்கிறது.
.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி இந்தியாவில் 1881 ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட Bakhshali என்ற சுவடியே (manuscript) தான பயன்பாட்டை கொண்டிருந்த ஆதாரமாகும். ஆனால் இந்த சுவட்டில் இன்று பூச்சியத்துக்கு வழங்கும் வட்ட குறியீடு (0) குறியீடு இருந்திருக்கவில்லை. பதிலாக ஒவ்வொரு பூச்சியத்துக்கும் ஒரு குற்று இடப்பட்டு உள்ளது. உதாணரமாக 100 என்பதை 1.. என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனாலும் தான பயன்பாடு (place value) இங்கு தெளியாக உள்ளது.
.
BakhshaliManuscript2
.
முதலில் இந்த சுவடி சுமார் 7ம் அல்லது 8ம் நூற்றாண்டுக்கு உரியது என்று கணிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அண்மையில் செய்யப்பட்ட கார்பன் பரிசோதனை 3ம் அல்லது 4ம் நூற்றாண்டுக்கு உரியது என்று மீள்கணிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய கணிப்பீட்டை அக்ஸ்போர்ட பல்கலைக்கழக (University of Oxford) ஆய்வாளர்கள் செய்துள்ளார்.
.
பண்டைய இந்தியாவின் Bakhahali என்ற இடத்தில் 1881 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இந்த சுவர் 1902 ஆம் ஆண்டு முதல் Oxford பல்கலைக்கழகத்தின் Bodleian நூலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சுவடி புத்த பிக்குகளின் கல்விக்காக தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. Birch மர பட்டையில் எழுதப்பட்ட, 70 பக்கங்கள் கொண்ட, இந்த சுவடிகளில் அச்சர கணித, எண் கணித, திரிகோண கணித உதாரணங்கள் எல்லாம் உள்ளனவாம்.

.