$3 பில்லியனுக்கு IMF இலங்கை அரசை கண்காணிக்கும்?

$3 பில்லியனுக்கு IMF இலங்கை அரசை கண்காணிக்கும்?

இலங்கைக்கு $3 பில்லியன் கடன் வழங்க முன்வந்துள்ளதாக IMF இன்று செவ்வாய் அறிவித்துள்ளது. அந்த $3 பில்லியனில், $333 மில்லியன் உடனடியாக இலங்கைக்கு கிடைக்கும் என்றும் IMF கூறியுள்ளது.

ஆனால் என்றும் இல்லாத வகையில் IMF இலங்கை அரசின் ஆட்சி முறையை கண்காணிக்கும் என்றும் IMF நிபந்தனை வைத்துள்ளது. IMF தனது அறிக்கையில் “A more comprehensive anti-corruption reform agenda should be guided by the on going IMF governance diagnostic mission that conducts an assessment of Sri Lanka’s…” என்று கூறியுள்ளது.

IMF தான் வழங்கும் கடனுக்கு ஊழலை தவிர்க்க நிபந்தனை வைப்பது இதுவே முதல் தடவை. இதுவரை காலமும் வறிய நாடுகளின் ஊழலை கருத்தில் கொள்ளாது IMF கடன் வழங்கி வந்துள்ளது. இம்முறை அக்குணத்தில் திடீர் மற்றம் ஏற்பட்டு, இலங்கை கடனுக்கு ஊழல் தவிர்ப்பு கட்டமைப்பு ஒன்றும் வகுக்கப்பட்டுள்ளது. ரணில் இது தொடர்பாக எதையும் இதுவரை கூறியிருக்கவில்லை.

கடனில் மூழ்கி இருக்கும் இலங்கைக்கு IMF வழங்குவது இன்னோர் கடனே. சொந்தமாக உழையாதவரை, ஊழலை தவிர்க்காதவரை, செலவை கட்டுப்படுத்தாதவரை கடனில் இருந்து இலங்கை மீள முடியாது.

இந்த மாதம் 10ம் திகதி நாம் பின்வரும் குற்றச்சாட்டை IMF அமைப்புக்கு email மூலம் அனுப்பி இருந்தோம். இது காகம் இருக்க பனம்பழம் விழுந்தது போலதுமாகலாம்.