$350 மில்லியன் திருட்டு பணத்தை விடுவிக்கிறது சுவிஸ் நீதிமன்றம்

$350 மில்லியன் திருட்டு பணத்தை விடுவிக்கிறது சுவிஸ் நீதிமன்றம்

Gulnara Karimova என்பவர் முன்னாள் உஸ்பேக்கிஸ்தான் (Uzbekistan) தலைவரின் மூத்த மக்கள். 1989 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான தந்தையின் ஆட்சி காலத்தில் Gulnara பெருமளவு பணத்தை இலஞ்சமாக பெற்று இருந்தார். குறிப்பாக அந்நாட்டில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உரிமை வழங்கி பெரும் பணத்தை இலஞ்சமாக பெற்று இருந்தார்.

ஆனாலும் தந்தையுடன் கொண்ட முரண்பாடுகள் காரணமாக இவர் 2014 ஆம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இவர் மீது உஸ்பேக்கிஸ்தானில் சுமார் $1 பில்லியன் ஊழல் வழக்குகளை தொடர்கின்றன. அந்நிலையிலும் இவர் தொடர்ந்தும் குற்றவியல் குழுக்களின் உதவியுடன் இணைந்து பல பினாமி நிறுவனங்களை நிறுவி பணத்தை பல நாடுகளில் ஒளித்து வைத்துள்ளார்.

அவரின் $350 மில்லியன் பணம் Gibraltar ஐ தளமாக கொண்ட Takilant Ltd. என்ற பினாமி நிறுவனம் மூலம் சுவிஸ் வங்கி ஒன்றில் வைக்கப்பட்டு இருந்தது. அதை சுவிஸ்சின் federal crime நீதிமன்றம் ஊழல் விசாரணை காரணமாக முடக்கி இருந்தது. அந்த பணத்தையே சுவிஸ் அப்பீல் நீதிமன்றம் விடுவித்து உள்ளது. Gulnara மீது போதிய அளவு குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்கிறார் சுவிஸ் நீதிபதி.

2016 ஆம் ஆண்டு அமெரிக்கா இவரின் $850 மில்லியன் பணத்தை முடக்கி இருந்தது.

அமெரிக்காவில் வாழும் Tajik இனத்தவர் ஒருவரை 1991 ஆம் ஆண்டு திருமணம் செய்த இவருக்கு இரு பிள்ளைகள் உண்டு. ஆனால் இவர் உஸ்பெக்கிஸ்தானில் விகாரத்து பெற, கணவன் அமெரிக்காவில் விவாகரத்து பெற்றுள்ளார். தற்போது ஒருவர் மற்றை நாட்டுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.