39 வயது இனவாதியை தாக்கிய 76 வயது சீன பெண்

39 வயது இனவாதியை தாக்கிய 76 வயது சீன பெண்

அமெரிக்காவின் சன் பிரான்சிஸ்கோ (San Francisco) நகரில் Xie XiaoZhen என்ற 76 வயது சீனா பெண் ஒருவரின் முகத்தில் 39 வயதுடைய Steven Jenkins என்ற வெள்ளை இனத்தவன் “Chinese” என்று கூறி இடித்துள்ளான். அதனால் கோபம் கொண்ட சீன பெண் அருகில் இருந்த மர துண்டு ஒன்றினால் தாக்கியவனை அடித்து காயப்படுத்தி உள்ளார்.

மேற்படி பெண் புதன்கிழமை சந்தி ஒன்றில் வீதியை கடக்க காத்திருந்த வேளையிலேயே Steven தாக்கி உள்ளார். Steven வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான வெள்ளையனை போலீசார் அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல முயன்ற வேளையிலும் 76 வயது பெண் ஆவேசமாக அவன் மீது வசைபாடிக்கொண்டு இருந்தார். கண்ணில் காயம் கொண்ட அவரை போலீசார் சிரமப்பட்டு கட்டுப்படுத்தினர்.

Xie சீனாவின் GuangDong பகுதியில் இருந்து அமெரிக்கா சென்றவர். புதன்கிழமை தாக்குதலின் பின் இவர் சீனாவில் பிரபலம் அடைந்து உள்ளார்.

இந்த பெண்ணை தாக்குவதற்கு சற்று முன் Steven இன்னோர் 83 வயதுடைய வியட்நாம் பெண்ணையும் தாக்கி உள்ளார் என்கிறது அப்பகுதி போலீஸ். அப்போது காவலாளி ஒருவர் விரட்ட Steven தப்பி ஓடியுள்ளார். அவ்வாறு தப்பி ஓடும்போதே Xie மீது தாக்குதல் செய்துள்ளார்.