50 சீன தம்பதிகள் இலங்கையில் திருமணம்

ChineseCouples

மொத்தம் 50 சீன தம்பதிகள் இன்று ஞாயிரு இலங்கையில் திருமணம் செய்துள்ளனர். குழுவாக செய்யப்பட்ட இந்த திருமண (mass wedding) வைபவம் இன்று ஞாயிரு கொழும்பில் இடம்பெற்றுள்ளது. சில தம்பதிகள் கண்டி சிங்கள ஆடைகளையும், சிலர் சீன ஆடைகளையும், சிலர் மேற்கு நாட்டு ஆடைகளையும் அணிந்திருந்தனர். இந்த 50 தம்பதிகளில் சிலர் ஏற்கனவே திருமணமானவர்.
.
தற்காலங்களில் சுமார் 2 மில்லியன் உல்லாச பயணிகள் வருடம் ஒன்றில் இலங்கை வருவதாகவும் அதில் 13% மானோர் சீனர்கள் என்றும் கூறப்படுகிறது. இலங்கை வரும் உல்லாச பயணிகள் தொகையில் சீனர் இரண்டாவது இடத்தில் உள்ளனர். முதலாம் இடத்தில் இந்தியர் உள்ளனர்.\
.
கண்டிய சிங்கள உடை உடுத்தி இன்று திருமணம் செய்த Alice Wu என்ற சீன பெண் தான் மூன்று வருடங்களின் முன் தன இலங்கை வந்திருந்ததாகவும், அப்போது கண்டிய நடனம் பயின்று உள்ளதாகவும் கூறியுள்ளார்.
.
படம்: Reuters

.