500 மில்லியன் Yahoo email திருட்டு

Yahoo

இலவச Email சேவை நிறுவனமான Yahoo தம்மிடம் email கணக்கு வைத்திருந்த குறைந்தது 500 மில்லியன் பாவனையாளர்களின் தரவுகள் திருடப்பட்டு உள்ளதாக இன்று கூறியுள்ளது. இந்த திருட்டு 2014 ஆம் ஆண்டில் இடம்பெற்று உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. திருட்டு ஆரம்பத்தில் அடையாளம் காணப்படவில்லை. திருடப்பட்ட தரவுகளுள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், password, பிறந்த திகதி, security கேள்விகளும் பதில்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.
.
இந்த திருட்டு காரணமாக, Yahoo பாவனையாளர்களை தமது password, security கேள்விகள், பதில்கள் என்பவற்றை உடனடியாக மாற்றுமாறு கேட்டுள்ளது.
.
சில பாவனையாளர் Yahoo emailலை தமது வங்கி கணக்குகளுடன் இணைத்து இருப்பதால், அந்த வங்கி விபரங்களும் களவாடப்பட்டு இருக்கும்.
.
கடந்த ஜூன் மாதத்தில் ரஷ்ய hacker ஒருவர் ஆகிய Tessa88 என்பவர் இந்த தகவல்களின் சிறு பகுதியை hackerகளின் தளம்களில் வெளியிட்டு இருந்தாராம். ஆகஸ்ட் மாதத்தில் வேறு ஒரு hacker இன்னோர் களவாடப்பட்ட தவுகளின் பகுதியை விற்பனை செய்ய முனைத்திருத்தாரம்.
.
உங்கள் உண்மை விபரங்களை இவ்வகை நிறுவனங்களுக்கு வழங்குவது எப்போதுமே ஆபத்து. பொய்யான தரவுகளை வழங்குவது பாதுகாப்பானது.
.