7 மணித்தியால அமெரிக்க-சீன பேச்சு, தீர்மானம் எதுவுமில்லை

US_China

அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் Mike Pompeo வும், சீனா அதிகாரி Yang Jiechi யும் ஹவாயில் பகிரங்க அறிவிப்பு எதுவும் இன்றி செவ்வாய் இரவும், புதனும் சந்தித்து உரையாடி உள்ளனர். ஆனால் அந்த உரையாடல்கள் எந்த இணக்கங்களையும் ஏற்படுத்தவில்லை.
.
ஹவாயில் உள்ள அமெரிக்காவின் Hickam விமான படை தளத்திலேயே இவர்கள் சந்தித்து உள்ளனர். செய்வாய் இரவு விருந்து ஒன்றின் பொழுதும், மறுநாள் புதனும் சந்தித்து மொத்தம் 7 மணித்தியாலங்கள் உரையாடி உள்ளனர்.
.
கரோனா வைரஸை சீனா கையாண்ட முறை, ஹாங் காங் மீதான சீனாவின் அணுகுமுறை, வடகொரியா என்பனவெல்லாம் அமெரிக்காவின் பேச்சு விசயங்களாக இருந்தாலும், இரண்டு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறும் பொருளாதார மோதலே ரம்ப் அணிக்கு முக்கிய விசயம்.
.
புதிய இறக்குமதி வரிகள் மூலம் சீனாவை அடிபணிய வைக்கலாம் என்ற ரம்பின் கணிப்பு இதுவரை பலன் அளிக்கவில்லை. இந்நிலை தொடர்ந்தால் ரம்ப் வரும் நவம்பர் தேர்தலில் தோற்கும் நிலை தோன்றலாம். தற்போதைய கருத்து கணிப்பு வாக்கெடுப்புகளின்படி Biden சனாதிபதி ஆகும் சாத்தியம் அதிகம்.
.
அதேவேளை ரம்பின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பால்ரன் (John Bolton) ரம்ப் தனது 2020 தேர்தல் வெற்றிக்கு சீனாவின் உதவிக்கு இரந்தார் என்று கூறிய செய்திகள் ஹவாய் பேச்சுக்களை மேலும் வலு இழக்க செய்துள்ளன.
.