70ஆம் வருட சீன அணிவகுப்பில் பாரிய ஆயுதங்கள்

ChinaFlag

இன்று செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 1ஆம் திகதி, சீனா தனது தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் 70 ஆம் வருட நிறைவை பெரும் ஆயுத அணிவகுப்புகளுடன் கொண்டாடியுள்ளது.
.
அணிவகுப்புக்கு வந்திருந்த சில ஆயுதங்கள் அமெரிக்க இராணுவ ஆய்வாளரை வியக்க வைத்துள்ளன.
.
அணிவகிப்பில் சென்ற DF-17 (அல்லது DongFeng-17) என்ற hypersonic ஏவுகணை ஒலியிலும் 5 மடங்கு வேகத்தில் செல்லவல்லது (Mach 5 அல்லது 3,400 mph). இவ்வகை ஏவுகணை உலகம் அறிந்தவரையில் சீனாவிடம் மட்டுமே தற்போது உள்ளது. அமெரிக்காவிடம் இவ்வகை ஆயுதம் இருப்பதாக இதுவரை அறியப்படவில்லை.
.
DF-41 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் அணிவகுப்பில் சென்றது. இது அணுகுண்டை உலகின் எந்த பாகத்துக்கும் வீசக்கூடியது. இது 7,500 மைல் தூரம் பாயக்கூடியது என்று கூறப்படுகிறது.
.
GJ-11 (அல்லது Gongji-11) என்ற ஆளில்லா யுத்த விமானமும் அணிவகுப்பில் சென்றது. இது எதிரியின் ரேடார் கருவிகளின் கண்களில் அகப்படாது எதிரியை தாக்க வல்லது.
.
HSU001 என்ற ஆளில்லா நீர்மூழ்கியும் அணிவகுப்பில் சென்றது. இது எதிரியை ஆபத்து இன்றி வேவு பார்க்க வல்லது.
.