75 இலட்சம் பெறுமதியான கஞ்சா கைப்பற்றல்

Ganja

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 75 இலட்சம் இந்திய நாணயங்கள் பெறுமதியான கஞ்சா (marijuana) பொலிசாரால் இன்று இந்தியாவில் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னாருக்கு எதிரே உள்ள இராமநாதபுர மாவட்டத்து கரையோரத்திலேயே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
.
கடத்தல் தகவல் கிடைத்த பொலிசார் உடன் அங்கு சென்று 170 பொதிகளில் இருத்த 158 kg கஞ்சாவை கைப்பற்றி உள்ளனர். இவ்வாறு இலங்கை வரும் கடத்தல் கஞ்சா, பின் வேறு நாடுகளுக்கும் கடத்தப்படுகிறதாம். இந்த கஞ்சா பொதுவாக ஆந்திராவின் வட பகுதியிலும், கேரளாவிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
.

அதேவேளை இலங்கை கடல்படை கப்பல் P422 இன்னுமோர் 158 kg கஞ்சா பொதியை காங்கேசன்துறையின் வடபகுதி கடலில் இருந்து நேற்று மீட்டுள்ளது.
.