$76,000 வரை வீழ்ச்சி அடைந்த Bitcoin 

$76,000 வரை வீழ்ச்சி அடைந்த Bitcoin 

Bitcoin என்ற உலகின் மிகப்பெரிய crypto நாணயத்தின் பெறுமதி சனி, ஞாயிறு தினங்களில் $76,000 வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க சனாதிபதி ரம்பின் ஆதரவு இருந்தும் crypto நாணயங்களின் பெறுமதிகள் வீழ்ச்சி அடைகின்றன.

Bitcoin ஒன்றின் பெறுமதி சில மாதங்களுக்கு முன் $126,000 க்கும் அதிகமாக இருந்தது. ஆனால் இதன் பெறுமதி தற்போது 40% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது.

தற்போது crypto நாணயங்களை ஆர்வத்துடன் கொள்வனவு செய்வோர் தொகை குறைந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

உலக பொருளாதார, அரசியல் குழப்பங்களால் தங்கத்தின் விலை அதிகரிக்க, crypto நாணயங்களின் பெறுமதி வீழ்ச்சி அடைகிறது. அதாவது தங்கம் கொண்டிருக்கும் நம்பகத்தன்மையை crypto நாணயங்கள் கொண்டிருக்கவில்லை என்பது புலனாகிறது.