அமெரிக்க சனாதிபதி ரம்ப் தனது இரண்டாவது ஆட்சியில் பயணிக்கும் முதல் வெளி நாடாக சவுதி அரேபியா உள்ளது (போப்பாண்டவரின் மரண சடங்கு தவிர). ரம்ப் சவுதிக்கு செவ்வாய் பயணிக்க உள்ளார். ஆனால் இஸ்ரேல் இந்த அமெரிக்க-சவுதி நெருக்கத்தில் இருந்து விலக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க-சவுதி நெருக்கத்தில் இஸ்ரேல்-சவுதி நெருக்கமும் ஒரு அங்கமாகவே முன்னர் இருந்தது. ஆனால் காசா யுத்தத்தில் இஸ்ரேலின் போக்கு இஸ்ரேலை விலக்கி உள்ளது. இஸ்ரேல் காசா யுத்தத்தை நிறுத்தி, பலஸ்தீனர் நாட்டை ஏற்றுக்கொண்டால் மட்டுமே சவுதி இஸ்ரேலுடன் நெருக்கமாககும் என்று சவுதி கூறியுள்ளது.
ரம்ப் பயணத்தில் சவுதி அமெரிக்காவில் சுமார் $1 டிரில்லியன் முதிலீடு செய்யவுள்ளதை அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. இவற்றை ரம்ப் தனது சாதனையாக பறைசாற்ற உதவும்.
ரம்ப் இந்த பயணத்தில் இஸ்ரேல் செல்வாரா என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. அனால் அவ்வாறு முன் அறிவிப்பு செய்யாது இறுதி நேரத்தில் அவர் இஸ்ரேல் பயணிக்கக்கூடும்.