இணக்கம் இன்றி இஸ்ரேல்-ஈரான் யுத்த நிறுத்தம்?

இணக்கம் இன்றி இஸ்ரேல்-ஈரான் யுத்த நிறுத்தம்?

இஸ்ரேலும், ஈரானும் இணங்கி கொண்ட ஒப்பந்தங்கள் எதுவும் இன்றி யுத்த நிறுத்தத்துக்கு இணங்கி உள்ளன என்று கூறப்படுகிறது. Qatar மூலமே இந்த இணக்கம் செய்யப்பட்டது.

சனிக்கிழமை ஈரான் கட்டாரில் (Qatar) உள்ள அமெரிக்க Al Udeid படை தளம் மீது சிறிய அளவிலான ஏவுகணை தாக்குதல் ஒன்றை செய்திருந்தது. ஆனால்  ஈரான் அமெரிக்காவுக்கு முன்னறிவிப்பு செய்திருந்ததால் பாதிப்புகள் மிக குறைவு.

முதலில் ரம்ப் இஸ்ரேலும், ஈரானும் யுத்த நிறுத்தத்துக்கு இணங்கி உள்ளன என்று கூறியிருந்தார்.

இஸ்ரேல் தாக்காவிடின் ஈரானும் தாக்காது என்று ஈரான் கூறியுள்ளது. இஸ்ரேலும் அவ்வாறே ஈரான் தாக்காவிடின் இஸ்ரேலும் தாக்காது என்று இஸ்ரேலும் கூறியுள்ளது. இது மட்டுமே அறிவிக்கப்பட்ட இணக்கம். வட கொரியாவுக்கு, தென் கொரியாவுக்கு இடையில் தற்போதும் நிலவுவது இவ்வகை யுத்த நிறுத்தமே.