யுத்த நிறுத்தத்தை மீறிய இஸ்ரேல் மீது ரம்ப் பாய்ச்சல்

யுத்த நிறுத்தத்தை மீறிய இஸ்ரேல் மீது ரம்ப் பாய்ச்சல்

அமெரிக்க சனாதிபதி ரம்ப் யுத்த நிறுத்தத்தை அறிவிக்க சற்று முன் ஈரான் இஸ்ரேல் மீது ஏவிய ஏவுகணைகள் Beer Sheva என்ற இஸ்ரேலிய நகரில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது. அங்கு குறைந்தது 5 பேர் பலியாகியும், பலர் காயமடைந்தும் இருந்தனர்.

இந்த தாக்குதலால் விசனம் கொண்ட இஸ்ரேல் ஈரான் மீது ரம்ப் யுத்த நிறுத்தத்தை அறிவித்த பின் தாக்குதல் செய்தது. அதனால் மூர்க்கம் கொண்ட ரம்ப் இஸ்ரேலை கடுமையாக வசை பாடினார்.

“I’m not happy with Israel” என்று கூறிய ரம்ப் தகாத வார்த்தைகளாலும் இஸ்ரேலை திட்டினார்.

பின்னர் “ISRAEL. DO NOT DROP THOSE BOMBS. IF YOU DO IT IS A MAJOR VIOLATION. BRING YOUR PILOTS HOME, NOW” என்றும் கூறினார் ரம்ப்.

இறுதியில் ரம்புக்கும் இஸ்ரேல் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் ஒன்றின் பின் இஸ்ரேல் தாம் மேற்கொண்டு தாக்குதல் செய்யமாட்டோம் என்று கூறியுள்ளது.

அத்துடன் ரம்ப் தான் ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த கூற்று இஸ்ரேலுக்கு பெரும் பின்னடைவு. இஸ்ரேல் ஈரானில் எதிர் காட்சிகளை வளர்த்து வந்துள்ளது.

சில தினங்களுக்கு முன் ரம்பும் ஈரானில் ஆட்சி மாற்றம் வருவதை ஆதரித்து இருந்தவர். அவர் ஏன் மனம் மாறினார் என்பது தெரியவில்லை.