அமெரிக்க சனாதிபதி ரம்புக்கும், சில கிழமைகளுக்கு முன் ரம்பின் அரசில் அவரின் வலது கரமாக இருந்த இலான் மஸ்க்குக்கும் இடையிலான முரண்பாடு செவ்வாய்க்கிழமை மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது,
அமெரிக்க Independence Day யான ஜூலை 4ம் திகதிக்கு முன் ரம்ப் தனது “Big and Beautiful” வரவு-செலவு திட்டத்தை போதிய ஆதரவு பெற்று சட்டமாக நடைமுறை செய்ய ரம்ப் கடுமையாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இலான் இந்த வரவு செலவு-திட்டம் அமெரிக்காவுக்கு ஆபத்தானது என்று கூறி கடுமையாக எதிர்த்து வருகிறார், அத்துடன் இந்த வரவு-செலவு திட்டத்தை ஆதரிக்கும் காங்கிரஸ் உறுப்பினர்களை அடுத்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனால் ஆவேசம் கொண்ட ரம்ப் Department of Government Efficiency (DOGE) இலானின் Tesla, SpaceX போன்ற நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் மானியங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இங்கே சிரிப்புக்குரிய உண்மை என்னவென்றால் DOGE என்ற திணைக்களம் இலானுக்காக ரம்பால் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.
ரம்பின் மிரட்டலால் இன்று செவ்வாய் Tesla நிறுவனத்தின் பங்குச்சந்தை பங்கு ஒன்றின் பெறுமதி சுமார் 6% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனால் இலானின் வெகுமதி இன்று மட்டும் $12 பில்லியனால் வீழ்ச்சி அடைந்துள்ளது.