முதலாவது வெகுமதியான அமெரிக்க நிறுவனம் NVIDIA 

முதலாவது வெகுமதியான அமெரிக்க நிறுவனம் NVIDIA 

வியாழக்கிழமை NVIDIA என்ற அமெரிக்க AI Chip தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குச்சந்தை பங்கு ஒன்றின் விலை $160.98 ஆக உயர்ந்ததால் இந்த நிறுவனத்தின் மொத்த பங்குச்சந்தை வெகுமதி (market capital) $3.92 டிரில்லியன் ($3,920 பில்லியன்) ஆகி இருந்தது. அதனால் NVIDIA முதலாவது உயரிய வெகுமதி கொண்டிருந்த நிறுவனமாகிறது.

2024ம் ஆண்டு டிசம்பர் 24ம் திகதி முதல் iPhone தயாரிக்கும் Apple நிறுவனம் இந்த பெருமையை கொண்டிருந்தது. அப்போது இந்த வெகுமதி $3.915 டிரில்லியன் ஆக அதிகரித்து இருந்தது.

தற்போது இரண்டாம் இடத்தில் Microsoft நிறுவனம் உள்ளது. இதன் வெகுமதி $3.7 டிரில்லியன் ஆக உள்ளது. இதன் பங்கு ஒன்றின் தற்போதைய விலை $499.56.

தற்போது 3ம் இடத்தில் உள்ள Apple நிறுவனத்தின் வெகுமதி $3.2 டிரில்லியன்.

NVIDIA 1993ம் ஆண்டு Jensen Huang என்ற தற்போதைய CEO ஆல் கூட்டாக ஆரம்பிக்கப்பட்டது.