அமெரிக்காவின் Texas மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்கு குறைந்தது 24 பேர் பலியாகியும், மேலும் 20 மாணவிகள் வரை தொலைந்தும் உள்ளனர். அப்பகுதியில் summer camp ஒன்றுக்கு சென்ற மாணவிகளே தொலைந்து உள்ளனர்.
ஆபத்தில் சிக்கிய குறைந்தது 237 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர்.
மேற்படி summer camp க்கு சுமார் 700 பாடசாலை மாணவிகள் சென்று இருந்தனர்.
Texas மாநிலத்தில் பாயும் Guadalupe River என்ற ஆற்று நீர்மட்டம் 45 நிமிடத்தில் 26 அடிகளால் உயர்ந்ததே இந்த அழிவுக்கு காரணம்.
அப்பகுதி வானிலை அவதானிப்பு இவ்வகை பெருமழையை கணித்து இருக்கவில்லை. சில இடங்களில் 15 அங்குல மழை வீழ்ச்சி பதியப்பட்டு உள்ளது.