ஞாயிறு அஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள Sydney Harbour Bridge என்ற பாலத்தின் ஊடு பலஸ்தீனர் நாட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. ஊர்வல ஏற்பாட்டாளர் 10,000 பேரையே எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கலந்துகொண்டோர் தொகை 90,000 என்கிறது போலீசாரின் கணிப்பு.
இந்த ஊர்வலத்தை தடை செய்ய முயற்சிகள் இடம்பெற்று இருந்தாலும் முதல் நாளான சனிக்கிழமையே Supreme Court அனுமதி வழங்கி இருந்தது. WikiLeaks Julian Assange போன்ற சில பிரபலங்களும் கூடவே பங்கெடுத்து இருந்தன.
ஊர்வலம் ஆரம்பித்து 2 மணித்தியாலத்தின் பின் பாதுகாப்பு கருதி போலீசார் பாலத்தில் இருந்தோரை மெல்ல பின் நோக்கி செல்ல கேட்டிருந்தனர்.
பிரான்ஸ், பிரித்தானியா, கனடா பலஸ்தீனர் நாட்டை ஆதரிக்க அறிவித்து இருந்தாலும், அஸ்ரேலியா இதுவரை அவ்வகை தீர்மானத்தை எடுத்திருக்கவில்லை.