கடந்த பல சந்ததிகளாக உலகம் முன் வந்த analog signal மூலம் வான் வழியே கிடைக்கும் தொலைக்காட்சி சேவையையே அனுபவித்து வந்தது. ஆனால் பின் வந்த தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தொலைக்காட்சி சேவை தற்போது digital signal மூலம் வான் வழியே கிடைக்கிறது. இந்த சேவை high definition (HD) தரத்தை கொண்டது.
உலகின் பெரும்பாலான நாடுகள் தற்போது digital தொலைக்காட்சி சேவைக்கு முற்றாக மாறிவிட்டன. இந்தியா போன்ற நாடுகள் தற்போது படிப்படியாக digital சேவைக்கு மாறி வருகின்றன.
இலங்கை, சோமாலியா, யெமென் ஆகிய சில நாடுகள் மட்டுமே தற்போதும் analog தொலைக்காட்சி சேவையை வழங்குகின்றன.
1979ம் ஆண்டு இலங்கைக்கு analog தொலைக்காட்சி சேவை வந்திருந்தாலும் 1981ம் ஆண்டே ஜப்பானின் உதவியுடன் ரூபவாஹினி இலங்கை முழுவதும் சேவை வழங்க ஆரம்பித்தது. பின்னர் cable மூல தொலைக்காட்சி சேவைகளும் வந்தன.
தற்போது இலங்கை Japan International Cooperation Agency யின் உதவியுடன் digital தொலைக்காட்சி சேவையை (DTTB: Digital Terrestrial Television Broadcasting) வழங்க நடவடிக்கைகளை எடுக்கிறது. இந்த திட்டத்தின் தொழிநுட்ப வேலைகள் ஜூன் மாதம் 9ம் திகதி ஆர்ப்பமாகி உள்ளன.