இன்று $250 மில்லியன் X-Press Pearl தண்டம் செலுத்தப்படவில்லை 

இன்று $250 மில்லியன் X-Press Pearl தண்டம் செலுத்தப்படவில்லை 

இந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கை நீதிமன்றம் விடுத்த கட்டளையின்படி 2021ம் மே மாதம் கொழும்பு கடலில் தீக்கு இரையாகி அமிழ்ந்த X-Press Pearl கப்பலின் உரிமை நிறுவனமான X-Press Feeders இன்று 23ம் திகதிக்குள் இலங்கை அரசுக்கு $250 மில்லியன் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அப்பணம் செலுத்தப்படவில்லை.

ஊழல் நிறைந்த முனைய அரசு X-Press Pearl உரிமையாளருக்கு மிக குறைந்த தண்டம் விதித்து, அதையும் அப்போது பெருமளவில் வீழ்ச்சி அடைந்திருந்த இலங்கை நாணயத்தில் பெற்று இருந்தது.

ஊழல் நிறைந்த முதல் இணக்கத்தை விசாரித்த தற்போதைய அரசு இதை மீண்டும் நீதிமன்றம் எடுத்து. நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு இலங்கைக்கு $1 பில்லியன் தண்டம் செலுத்தப்படல் வேண்டும் என்றும், அதன் 1/4 பங்கு ($250 மில்லியன்) செப்டம்பர் 23ம் திகதிக்கு முன் செலுத்தப்படல் வேண்டும் என்று கூறியிருந்தது.

தாம் ஏற்கனவே அரசுக்கு வழங்கிய தாண்ட பணம் பாதிக்கப்பட்டோரை இதுவரை அடையவில்லை என்பதாலேயே தாம் மேலதிக பண வழங்கலை நிறுத்தி உள்ளதாக X-Press Feeders காரணம் கூறியுள்ளது.

Vitaly Tyutkalo என்ற அமிழ்ந்த கப்பலின் தலைமை அதிகாரி தற்போதும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.