நிக்கோலஸ் சர்கோசி (Nicolas Sarkozy) என்ற முன்னாள் பிரெஞ்சு சனாதிபதிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு வழங்கப்படுள்ளது. லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபியிடம் இலஞ்சம் பெற்று தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தினார் என்பதே இவர் மீதான குற்றச்சாட்டு.
அத்துடன் சர்கோசி 100,000 யூரோ ($117,000) குற்ற பணமும் செலுத்த தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
தற்போது 70 வயதான சர்கோசி 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பிரான்சின் சனாதியாதியாக பணியாற்றியவர். இவர் மீதான விசாரணைகள் 2013ம் ஆண்டு ஆரம்பமாகி இருந்தன.
கடாபியின் மகன் Saif al-Islam தனது தந்தையிடம் சர்கோசி பல மில்லியன் பணத்தை பெற்றார் என்று கூறிய குற்றச்சாட்டை அடுத்தே விசாரணைகள் ஆரம்பமாகி இருந்தன. பெற்ற பணத்துக்கு பதிலாக சர்கோசி கடாபியின் பெயரை மேற்கு நாடுகளின் புகழ் பெற செய்ய இணங்கி இருந்தாராம்.
இதற்கு முன் 2014ம் ஆண்டு இவர் நீதிபதி ஒருவருக்கு இலஞ்சம் வழங்க முனைந்தார் என்ற குற்றச்சாட்டில் 2021ம் ஆண்டு குற்றவாளியாக தீர்ப்பு கூறப்பட்டிருந்தார்.
Ziad Takieddine என்ற லெபனான் வர்த்தகர் ஒருவரும் சர்கோசி மீதான கடாபி குற்றச்சாட்டை உறுதி செய்திருந்தார். இவர் ஒரு இடை தரகராக இயங்கியவர்.
Claude Gueant என்ற முன்னாள் பிரெஞ்சு அமைச்சரும் இலஞ்சம் பெற்று இருந்தார் என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருந்தது.