தமிழ்நாட்டில் அரசியல்வாதியான நடிகர் ஜோசப் விஜயின் அரசியல் ஊர்வலம் ஒன்றில் ஏற்பட்ட நெரிச்சலுக்கு 8 சிறுவர்கள், 16 பெண்கள் உட்பட 36 பேர் பலியாகியும், குறைந்தது 50 காயப்பட்டும் உள்ளனர். தமிழக வெற்றி கழக கட்சியின் இந்த ஊர்வலம் சனிக்கிழமை கரூர் மாவட்டத்தில் இடம்பெற்றது.
2024ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விஜயின் கட்சி இந்திய பிரதமர் மோதியின் பா.ஜ. கட்சியையும், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினின் தி.மு.க. கட்சியையும் எதிர்த்து 2026ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ளது.
மரணித்த ஒவ்வொருவருக்கும் 1 மில்லியன் இந்திய ரூபாய்களை ($11,280) வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதமும் விஜய் ஊர்வல நெரிச்சலுக்கு 6 பேர் பலியாகி இருந்தனர்.