காசா மேடையில் கூத்தாட மீண்டும் வருகிறார் Tony Blair?

காசா மேடையில் கூத்தாட மீண்டும் வருகிறார் Tony Blair?

அமெரிக்க சனாதிபதி ரம்ப் திங்கள் காசாவுக்கு புதிதாக ஒரு 20-படிமுறை திட்டத்தை முன்வைத்திருந்தார். அந்த 20 படிமுறைகளில் 1 மட்டுமே தெளிவாக கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு சாதகமான அந்த முதலாவது படிமுறைப்படி ஹமாஸ் உயிருடன் இருக்கும் மற்றும் மரணித்த அணைத்து இஸ்ரேல் கைதிகளையும் 72 மணித்தியாலத்துள் விடுதலை செய்யவேண்டும். 

ஏனைய படிமுறைகள் அப்படி நிகழ்ந்தால் இப்படி செய்யலாம் என்று நிபந்தனைகளை கொண்ட, காலம் குறிப்பிடப்படாத, தெளிவற்ற படிமுறைகளே. அத்துடன் இவை எல்லாம் காசாவுக்கு மட்டுமே, West Bank தொடர்ந்தும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருக்கும்.

ரம்பின் இந்த திட்டத்துக்கு ரம்புடன் தலைமை தாங்க அழைக்கப்பட்டுள்ளார் தற்போது 72 வயதான முன்னாள் பிரித்தானிய பிரதமர் Tony Blair (1997-2007). இவர் முற்காலங்களில் மத்திய கிழக்கில் செய்த அரசியல் கூத்துக்களின் அழிவுகள் ஏராளம்.

இவர் பிரதமர் பதவியை 2007ம் ஆண்டு நீங்கிய உடனேயே Quartet என்ற அமெரிக்கா, ரஷ்யா, ஐ.நா., ஐரோப்பிய ஒன்றிய அணி சார்பில் இஸ்ரேல்-பலஸ்தீன தீர்வுக்கு நியமிக்கப்பட்டவர். 2015ம் ஆண்டு இவர் அந்த பதவியை விட்டு ஓடியவர். அப்போது எதையும் சாதிக்காத இவர் இப்போது எதை சாதிப்பார்?

2003ம் ஆண்டு முன்னாள் அமெரிக்க சனாதிபதி Bush முழு பொய்களுடன் சதாமின் ஈராக்கை ஆக்கிரமித்தபோது Blair அமெரிக்காவுடன் கூடவே சென்று ஈராக்கை அழித்தவர். இந்த அழிவுகளுக்காக Francesca Albanese போன்ற சிலர் இவரை International Criminal Court க்கு இழுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அமெரிக்காவுடன் ஆப்கானிஸ்தானுள் நுழைந்த Balir இம்முறை உங்களை கைவிடோம் என்று கூறியிருந்தார். ஆனால் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற, பிரித்தானியாவும் முந்திக்கொண்டு வெளியேறியது.